சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் கண்டியூர் அருகே தனியார் பேருந்தில் மின்சாரம் தாக்கியதில் பயணிகள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. தஞ்சாவூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் கணநாதன் என்னும் தனியார் நிறுவனப் பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்த போது உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.