தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி இன்று காலை 8 மணி அளவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. சற்றுமுன் நிலவரப்படி விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணர் கோவிலில் சாவி இல்லாததால் தபால் ஓட்டு பெட்டி பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. முகவர்கள் முன்னிலையில் தபால் வாக்குப் பெட்டியில் பூட்டு உடைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.