ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி டிரா செய்திருக்கிறது.
முன்னதாக இந்திய அணி 200 ரன்களைக் கூட தொடாது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியிருந்தார். அதற்கு சமூக வலைத்தளத்தில் சேவாக் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் அழுத்தமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய வீரர்கள் 5 விக்கெட்டுக்கு மேல் இழக்காமல் இந்த போட்டியை டிரா செய்திருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி டிரா செய்து இருக்கிறது. குறிப்பாக இந்த போட்டியில் ரிஷப் பண்ட் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு பக்கபலமாக இருந்த புஜாரா 77 ரன்கள் எடுத்திருந்தார். இவர்கள் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தது இந்திய அணி டிரா செய்வதற்கு முக்கியமாக இருந்தது.
தொடர்ச்சியாக விளையாடிய விகாரி 100 பந்துகளை சந்தித்து 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதாவது ஆட்டம் இழக்க கூடாது என்பதில் இந்திய அணி வீரர்கள் உறுதியாக இருந்தார்கள். அதன் எதிரொலியாக இந்த போட்டியை இந்திய அணி போராடி டிரா செய்திருக்கிறது.407 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து 334 ரன்கள் எடுத்து இருக்கிறது இதன் மூலம் இந்த போட்டிக்கு டிராவுக்கு வந்திருக்கிறது.
3rd Test. It's all over! Match drawn https://t.co/xHO9oit5X4 #AUSvIND
— BCCI (@BCCI) January 11, 2021