Categories
மாநில செய்திகள்

Breaking: சினிமா டிக்கெட் கட்டணம் உயர்வு?… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் திரையரங்குகளில் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 50 சதவீத இருக்கையுடன் திரையரங்குகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன் பிறகு பல நடிகர்கள் 100 சதவித இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததால், தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழக அரசை மீண்டும் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது.

ஆனால் திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிடப்படுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் திரையரங்குகளில் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. காட்சிகளின் எண்ணிக்கையை மட்டும் அதிகப்படுத்துவது போதாது, கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மனுதாரர் கோரிய நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Categories

Tech |