மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதுரையில் நடைபெற்ற 21வது மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பாலகிருஷ்ணன் இரண்டாவது முறையாக போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மத்தியகுழு உறுப்பினர் ரங்கராஜன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் இதிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ.சவுந்தரராஜன் விடுவிக்கப்பட்டுள்ளார்.