Categories
தேசிய செய்திகள்

BREAKING: சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து…. ரயில்வே புதிய அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பலத்த மழை காரணமாக தென்மேற்கு ரயில்வே மற்றும் கொங்கன் ரயில்வேயில் சில சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி மும்பை சிஎஸ்டி – மங்களூர் சிறப்பு ரயில் (01133) ஜூலை 27-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மங்களூரு சந்திப்பு -மும்பை சிஎஸ்டி க்கு புறப்படும் (01134) சிறப்பு ரயில் ஜூலை 28-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |