கொரோனாவில் இருந்துஉருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதன்படி தமிழகத்திலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு 97 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனையடுத்து தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து வந்தது.
இந்நிலையில் இந்தியாவில் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் CoWIN செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டை இல்லாதவர்கள் 10-ம் வகுப்பு ஐடி கார்டை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கோவின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.