தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்ததையடுத்து 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாயும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாயும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோல 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டது.
மேலும் 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் தொடரும் என்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 2 மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மின் கட்டண உயர்வுக்கு சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10% சதவீதம் குறைப்பு சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.