ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கி கணக்கு முதல் சிலிண்டர் விலை வரை அனைத்திலும் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை 187 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 187 குறைக்கப்பட்டு ரூ.2,186 ஆக குறைந்துள்ளது. மேலும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றம் இன்றி 1018.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Categories