தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வை இழந்து தவித்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதையடுத்து சிலிண்டர் விலையும் உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், ரூ.852- இல் இருந்து 877 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது. கடந்த மே மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 825 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 877 ரூபாய்க்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.