நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை இதுவரை இல்லாதது போல புதிய உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக சிலிண்டர் எரிவாயு விலை ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் உயர்த்தப்பட்டு வருகிறது. அதனால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 101 ரூபாய் உயர்ந்து ரூ.2,234.50- க்கு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அக்டோபர் 6ஆம் தேதி ரூ.1865 ஆக இருந்த சிலிண்டர் விலை இரண்டு மாதங்களில் 369 ரூபாய் அதிகரித்துள்ளது.