சிவகாசி அருகே காளையார்குறிச்சி கிராமத்தில் பட்டாசு ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் பட்டாசு ஆலை ஒன்று உள்ளது. அதில் சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த ஆலையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அங்கு பிற்பகல் 2 மணியளவில் மருந்து கலவை செய்யும் அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவம் பற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைவாக விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். மேலும் விபத்தில் சிக்கி 5 பேர் பயங்கர காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறியதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.