நேபாளத்தில் தாரா ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான ட்வின் ஓட்டர் 9-N-AET விமானம் பொக்காராவிலிருந்து நேற்று காலை 9.55 மணிக்கு புறப்பட்டது. அதன் பிறகு சில நிமிடங்களில் தொடர்பை இறந்ததாக விமான நிலைய செய்தி தொடர்பாளர் அறிவித்தார். இதையடுத்து நேபாள ராணுவத்திற்கு உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின் படி அந்த விமானம் லாம்சே ஆற்றின் முகப்பில் விலை சரிவின் கீழ் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது.
நேபாளத்தில் மாயமான விமானம் முஸ்டங் மாகாணம் தசங்-2என்ற பகுதியில் சுக்குநூறாக நொறுங்கிய விபத்துக்குள்ளான புகைப்படத்தை நேபாள ராணுவம் பகிர்ந்து உள்ளது. தற்போது விமானத்தின் நிலையை பார்க்கும் போது விமானத்தில் பயணித்தவர்கள் இறந்ததாக நம்பப்படுகிறது. இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இதையடுத்து நேபாள ராணுவம் தரை மற்றும் வான் வழித்தடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்றது. அந்த விமானத்தில் 2 ஜெர்மனியர்கள், 13நேபாள பயணிகள் மற்றும் மூன்று நேபாள பயணிகள் தவிர நான்கு பேர் இந்தியர்கள் பயணம் செய்தனர் என பயணிகளின் பட்டியலை விமான நிறுவனம் வெளியிட்டது.