தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதுமட்டுமல்லாமல் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்து சென்றது.அதனால் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் அதிக அளவு மழை கொட்டி தீர்த்தது அனைத்து சாலைகளிலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. குறிப்பாக சுரங்கப்பாதைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரங்கநாதன் சுரங்கப்பாதையில் மாநகரப் பேருந்து சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பயணிகளுடன் போரூர்-மந்தைவெளி சென்ற 12M அரசு மாநகரப் பேருந்து சுரங்கப்பாதை மழைநீரில் சிக்கியதை அடுத்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.