Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : சூப்பர் ஓவர் – 14 எடுத்தால் இந்தியா வெற்றி ….!!

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில்  டை ஆனதால் சூப்பர் ஓவர் வைக்கப்பட்டு இந்த அணி வெற்றி பெற்றது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் வெலிங்டனில் நான்காவது டி20 போட்டியில் பங்கேற்றுள்ளது. ஏற்கனவே 3-0 என்று தொடரைக் கைப்பற்றியதால், இந்திய அணியில் மூன்று வீரர்கள் மாற்றப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.இதேபோல் நியூசிலாந்து அணியில் காயம் காரணமாக வில்லியம்சன் விலகியதையடுத்து டேரில் மிட்சல் இடம்பெற்றார். இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுதி பந்துவீச்சைத் தேர்வுசெய்தார்.

இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்ளை இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக ஆடிய மனீஷ் 36 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அசத்தினார். நியூசிலாந்து அணி சார்பில் லஷ் சொதி 3 விக்கெட்டை எடுத்தார்.

பின்னர் 166 எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி  20 ஓவர்களில்7 விக்கெட்டுக்ளை இழந்து 165 ரன் எடுத்து ஆட்டத்தை டை செய்தது. அந்த அணி சார்பில் கலின் மன்றோ 64 ரன் குவித்தார். இந்திய அணி தரப்பில் தாகூர் 2 விக்கெட் எடுத்தார்.

ஆட்டம் டை ஆனதால் சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது. அதில் நியூசிலாந்து அணி 1 ஓவருக்கு 1 விக்கெட் இழந்து 13 ரன் அடித்துள்ளது.

Categories

Tech |