சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்கு கப்பல் மீட்கப்பட்டு மீண்டும் மிதக்கும் விலக்கிக் கொண்டு வரப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பரபரப்பான கப்பல் பாதையாக இருப்பது எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய். பல நாட்டு சரக்கு கப்பல்களும் இந்தப் பாதையைப் பயன்படுத்தி வருகின்றன. ஆனால் அந்த கால்வாயில் பிரம்மாண்டமான சரக்கு கப்பல் ஒன்றை சில தினங்களுக்கு முன்பு சிக்கிக் கொண்டது. அதனால் உலக பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. அந்தக் கால்வாய் வழியாக உலக வர்த்தகத்தின் முக்கிய புள்ளி விவரங்கள் அனைத்தும் அடங்கியுள்ளன.
அதனால் கடல் வழிப் பாதையில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 2,900கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் ஏற்பட்ட புழுதிப் புயலால் சிக்கி நின்ற சரக்கு கப்பலை மீட்க கப்பல் ஊழியர்கள் அனைவரும் திணறினர். இதனைத் தொடர்ந்து 300 கப்பல்கள் வரிசையில் காத்து நிற்கின்றன.
இந்நிலையில் சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்கு கப்பல் மீட்கப்பட்டு மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டு வரப்பட்டதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை 20,000 பெட்டகங்கள் உடன் சூயஸ் கால்வாயில் தரைதட்டிய கப்பல் ஒரு வாரம் முயற்சிக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது. சரக்கு கப்பல் தரை தட்டியது ஆசிய மற்றும் மேற்கிந்திய நாடுகள் இடையேயான வர்த்தக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.