Categories
மாநில செய்திகள்

#Breaking: சென்னையில் 13 விமானங்கள் ரத்து…. சற்றுமுன் வெளியான தகவல்…..!!!!!

அசானி புயல் காரணமாக ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளிலும் மேற்கு வங்காளத்தின் கடலோரப் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் புயல் காரணமாக விசாகப்பட்டினம், விஜயவாடா, ஹைதராபாத், பெங்களூர், கொல்கத்தா, ஜெய்ப்பூர், ராஜமுந்திரி ஆகிய நகரங்களுக்குச் செல்லும்  விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து வரவேண்டிய 13 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மொத்தம் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று 13 மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

Categories

Tech |