வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது கரையைக் கடக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னைக்கு அதி கனமழை காண ரெட்அலர்ட் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. முன்னதாக சென்னையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது தாழ்வு மண்டலம் கரையை கடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரையை கடக்கும் நேரத்தில் பலத்த காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.