வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. இது சென்னை அருகே கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.
பல பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று அதிக மழை தொடரும் என தென்மண்டல வானிலை மைய தலைவர் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியில் வராமல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.