தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழை பெய்யும் அளவை பொருத்து பாதிப்பை கருதி மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். நாளை கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நாளை சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நாளை பெரும்பாலான மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.