Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : சென்னையில் பரபரப்பு… ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி குத்திக்கொலை…. போலீஸ் தீவிர விசாரணை….!!

சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி சுவேதாவை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்..

சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாயிலில் கல்லூரி மாணவி சுவேதாவை பட்டப்பகலில் கத்தியால் குத்திய பின் இளைஞர் ராமு தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்தார். இதையடுத்து காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாணவி சுவேதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்..

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் கத்தியால் குத்தினாரா? என்று சேலையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 2016ல் சுவாதி கொல்லப்பட்ட நிலையில் மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Categories

Tech |