தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கு மத்தியில் கேரளாவில் டெங்குவின் தொடர்ச்சியான ஜிகா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கையாக, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் வளர்வது கண்டறியப்பட்டால் ரூபாய் 100 முதல் ரூபாய் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வீடுகளுக்கு ரூபாய் 200 வரையும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூபாய் 15,000, கடைகளுக்கு ரூபாய் 5000 ,உணவகங்களுக்கு ரூபாய் 25 ஆயிரம், நட்சத்திர ஹோட்டல் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ரூபாய் 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.