நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இனி அனைத்து வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் கோயம்பேடு சந்தைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி. திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். புதிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு இன்று அல்லது நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.