Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் மீண்டும் கனமழை…!!!

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் எம் ஆர் சி, பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், அடையாறு, மெரினா, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கேளம்பாக்கம், புரசைவாக்கம், வடபழனி, தி  நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகின்றது. முன்னதாக சென்னைக்கு நாளை ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |