சென்னையில் மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் 11 மாத காலத்துக்கு பணியாற்ற மகப்பேறு மற்றும் குழந்தை நல மருத்துவர்கள், பொது மருத்துவர்கள் 51 பேர் தேவை என்ற சென்னை மாநகராட்சி சற்றுமுன் அறிவித்துள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஜூலை 22 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories