Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் 17 சுரங்கப்பாதைகளில் மழைநீர் அகற்றம்… சென்னை மாநகராட்சி…!!!

சென்னையில் 17 சுரங்கப்பாதையில் மழைநீர் அகற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் அதிக மழை பெய்தது. இதனால் சென்னையின் பல முக்கிய இடங்கள் வெள்ள காடாக மாறியது. மேலும் வெள்ளநீர் வீட்டுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சுரங்கப்பாதைகள் முழுவதும் மழை நீரால் மூழ்கியது.

இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதனை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வரை 22 சுரங்கப் பாதைகளில் 17 சுரங்க பாதைகளில் மழைநீர் முழுவதும் அகற்றப்பட்டுள்ளது. சென்னையில் மழை நீர் தேங்கி 523 இடங்களில் 202 இடங்களில் மழைநீர் முழுவதும் அகற்றப்பட்டுள்ளது. மழையின்போது விழுந்த 469 மரங்களும் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |