Categories
மாநில செய்திகள்

சென்னையைச் சேர்ந்த 2 நிதி நிறுவன குழுமங்கள் ரூ.300 கோடிக்கு மேலான வருவாயை மறைத்தது கண்டுபிடிப்பு!!

சென்னையைச் சேர்ந்த 2நிதி நிறுவன குழுமங்கள் ரூபாய் 300 கோடிக்கு மேலான வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர். 

சென்னையில் செயல்படும் 2 நிதி நிறுவன குழுமங்கள் சுமார் 300 கோடிக்கும் மேலான  வருமானத்தை மறுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னையில் 35 இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

பெரு நிறுவனங்கள், தொழில் அதிபர்களுக்கு இரண்டு நிதி நிறுவனங்களும் அதிக வட்டியில் கடன் கொடுத்துள்ளதாகவும், பினாமி வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி அதிக வட்டி வசூல் செய்ததும் தெரியவந்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |