சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜீத் பானர்ஜியை கொழிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தலைமை அடங்கிய கொலிஜியம் அமைப்பு இந்த பரிந்துரையை தற்போது வழங்கியிருக்கின்றார்கள். முக்கியமான நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கான பரிந்துரை என்பது கொலிஜியத்தால் வழங்கப்பட்டிருக்கின்றது. நீதியரசர் சஞ்சித் பேனர்ஜி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அடுத்து பதவி ஏற்பதற்கான பரிந்துரை என்பது வழங்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக தலைமை நீதிபதிகளின் பரிந்துரையை மத்திய அரசு அப்படியே ஏற்றுக்கொள்ளும். எனவே இந்த பரிந்துரை அப்படியே ஏற்கப்பட்டு சென்னை நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்ஜீத் பானர்ஜி விரைவில் பதவி பிரமாணம் எடுத்துகொள்ளவார். அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக செயல்பட்டு வருகிறார். கல்கத்தாவில் பிறந்து எகனாமிக்ஸ் படித்து, பின்னர் சட்டம் பயின்றவர். கல்கத்தா உயர் நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம், ஒடிஷா உயர்நீதிமன்றம் என நாட்டின் மிக முக்கியமான உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார்.
அதன்பிறகு கடந்த 2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அவர் கல்கத்தா மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு தற்போது நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது அவரது பெயர்தான் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு தற்போது பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி ஷாகி வருகின்ற 31ஆம் தேதி ஓய்வு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.