தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அதை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்திய மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
இருந்தாலும் சில இடங்களில் வெள்ளம் காரணமாக விளைநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் அணைகளில் நீர் நம்புவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பகல் 1.30 மணிக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்படுகிறது.அதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்ற பொதுப் பணித் துறை செயலாளர் அறிவித்துள்ளார். தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இன்று உபரி நீர் திறக்கப்படுகிறது.