சென்னை டி.பி.ஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டி.பி.ஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். டிபிஐ வளாகத்தில் அன்பழகனின் உருவச்சிலையும் நிறுவப்படும் என்று அறிவித்துள்ளார். பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவுருவ சிலை நிறுவப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரூபாய் 7,500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகன் பெயரில் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு திட்டத்திற்கு ரூபாய் 1400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.