சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட்அலர்ட் திரும்ப பெறப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது:” குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை விலக்கப்பட்டு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி- சென்னைக்கு இடையே வடதமிழகம் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா பகுதியில் நாளை கரையை கடக்கும்” எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Categories