சென்னை துறைமுகம் என்ற பெயரில் 45 கோடி மோசடி செய்த புகாரில் ரூபாய் 5.74 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சென்னை துறைமுகம் பெயரில் ரூபாய் 45 கோடி மோசடி புகாரில் 5.74 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 230 ஏக்கர் நிலம், 20 மனைகள், வங்கி டெபாசிட் என 47 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சென்னை துறைமுகம் என்ற பெயரில் போலியான வங்கி கணக்குகளை தொடங்கி மோசடி செய்த புகாரில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Categories