சென்னையில் இன்று (செப்டம்பர் 5) ஒரு லிட்டர்பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 107 நாட்களாக ரூ. 94.24க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில், பெட்ரோல் இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கச்சா எண்ணெய் வரத்து குறைவு, சுத்திகரிப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தடை காரணமாகவே டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பங்க் ஊ ஊழியர்கள் கூறியுள்ளனர்.