Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னை மழை நீரில் பாய்ந்த மின்சாரம்…. அடுத்தடுத்து 3 பேர் மரணம்

சென்னையில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 6 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகின்றது. சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் சென்னையில் சில சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சென்னை மயிலாப்பூரில் வீட்டின் வெளியே தேங்கியிருந்த மழை நீரில் கால் வைத்தவுடன் மின்சாரம் பாய்ந்ததில் 13 வயது சிறுவன் லட்சுமணன் உயிரிழந்தார். அதேபோல் சென்னை ஓட்டேரியில் நியூ போண்ட்ஸ் சாலையில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி தமிழரசி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |