தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளதால் நேற்று மாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.அதிலும் குறிப்பாக சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதனை ராட்சச மோட்டார்கள் மூலம் உறிஞ்சும் பணி நடந்து கொண்டிருக்கிறது.மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்து தர பேரிடர் குழு தயார் நிலையில் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு வேண்டிய அனைத்து விவரங்களையும் உடனடியாக வழங்க முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மழை மற்றும் வெள்ளம் பற்றி பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.இதுபோன்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மழை மற்றும் வெள்ளம் குறித்து பகிரப்படும் போலி வீடியோக்களை நம்ப வேண்டாம்.அரசு இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் வெள்ளம் குறித்த செய்திகளை மட்டுமே நம்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.