Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: சென்னை மாநகராட்சி பட்ஜெட்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் 6 ஆண்டுகள் கழித்து மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூட்ட அரங்கில் மேயர் மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் தலைமையில் கமிஷனர் ககன்தீப்சிங் பேடி முன்னிலையிலும் நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வரிவிதிப்பு நிதிக்குழு தலைவர் சர்ப ஜெயதாஸ் தாக்கல் செய்து வருகிறார்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2011 கணக்கெடுப்பின் படி 66.72 லட்சமாக இருந்த மக்கள் தொகை 88 லட்சமாக உயர்ந்துள்ளது. பள்ளிகளில் பாலின சமத்துவ குழுக்கள் அமைக்கப்படும். மாணவிகளுக்கு நிர்பயா நிதி மூலம் ரூ.23.66 கோடி செலவில் சானிட்டரி நாப்கின் வழங்கப்படும். அத்துடன் சென்னை சாலைகளில் பெயர் பலகைகள் டிஜிட்டலில் வைக்கப்படும் எனவும் உயர்நிலைப்பள்ளிகளில் 1.86 கோடியில் இணையதள இணைப்பு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கவுன்சிலர்களின் மேம்பாட்டு நிதி 30 லட்சத்தில் இருந்து 35 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்த அறிவிப்புகள் இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

Categories

Tech |