தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கென்யாவில் இருந்து சென்னை வழியாக ஆந்திரா சென்ற 38 வயதான பெண்ணுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு காரில் சென்ற பெண்ணுக்கு ஒமைக்ரான் உறுதியானதை அடுத்து பெண்ணின் குடும்பத்தினர் 6 பேரருக்கு எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் சோதனையில் நெகட்டிவ் வந்துள்ளது.