ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கடைசி தேதி செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது வரை 92.8% ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உங்கள் ரேஷன் கார்டுடன் (Ration card) ஆதார் கார்டை (aadhar Card) இணைக்கவில்லை என்றால், உடனே இணைக்கவும். இல்லை என்றால், கார்டு வைத்திருப்பவர்கள் சிக்கலை சந்திக்க நேரிடும்.
Categories