செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை உலகச் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. அதில் பெரும்பாலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் புகைப்படம் தான் இடம்பெற்றுள்ளது. அதனால் பாஜகவினர் பிரதமர் மோடி புகைப்படத்தை ஸ்டிக்கர் விளம்பர பலகையில் ஒட்டப்பட்டது. இந்நிலையில் செஸ் விளம்பரத்தில் மோடியின் புகைப்படம் இடம்பெறாதது தொடர்பாக சிவகங்கை சேர்ந்த ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் போட்டியை தமிழகத்தில் நடத்த முடிவெடுத்தது பெருமை மிக்கது. குடியரசு தலைவர், பிரதமரின் கீழ் நாடு நிர்வகிக்கப்படும் நிலையில் சர்வதேச நிகழ்வை இணைந்து நடத்த வேண்டும். குடியரசு தலைவர், பிரதமர் கலந்து கொள்ளவே இல்லை என்றாலும் விளம்பரங்களில் புகைப்படம் இடம்பெற்று இருக்கலாமே என்று கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் விளம்பரங்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் படங்கள் இடம்பெற வேண்டும் என்றும், இதனை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.