Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: “சொத்துக்களை ஏமாத்தீட்டாங்க”….. பிரபல தமிழ் நடிகர் மீது சகோதரிகள் பரபரப்பு புகார்…. !!!!!

நடிகர் சிவாஜிக்கு ராம்குமார், பிரபு, சாந்தி, ராஜ்வி என நான்கு குழந்தைகள் உண்டு. அதில் நடிகர் பிரபுவை அனைவருக்கும் தெரியும். சிவாஜி காலத்திலிருந்தே அவர் நடித்து வருகிறார். இன்று பல முக்கிய குணசித்திர பாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் பிரபு அவரது அண்ணன் ராஜ்குமாருக்கு எதிராக சகோதரிகள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். ஜோடிக்கப்பட்ட உயில்  தயாரித்து தங்களை ஏமாற்றி விட்டதாகவும் தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை பிரபு மற்றும் ராஜ்குமார் ஆகியோர் விற்று விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். நடிகர் சிவாஜி கணேசன் சொத்துக்களை பிரிப்பதில் மகன்கள், மகள்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |