சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ. ராசாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ. ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, ராசாவின் உறவினர் பரமேஷ் குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஜனவரி 10ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக சிபிஐ 2015 ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது. வருமானத்துக்கு அதிகமாக 5.53 கோடி சொத்துக்களை குவித்துள்ளதாக கடந்த மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.