சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது.
இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். உருமாறிய கொரோனா காரணமாக பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களை தனிமைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.
இதனையடுத்து சர்வதேச விமான போக்குவரத்து காண தடை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உருமாறிய கொரோனா பரவ வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு கருதி இந்த தடை நீட்டிக்கப்பட்டு வதாக கூறியுள்ளது. மேலும் சிறப்பு விமான சேவை மற்றும் சரக்கு விமான சேவை வழக்கம்போல நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.