Categories
மாநில செய்திகள்

#BREAKING : ஜனவரி 31ஆம் தேதி வரை ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கலாம் -அமைச்சர் செந்தில் பாலாஜி..!!

ஜனவரி 31ஆம் தேதி வரை ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கலாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்..ஒரு கோடிக்கும் அதிகமான ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்காத காரணத்தால் தற்போது ஜனவரி 31 ஆம் தேதி வரை இணைப்புக்கான காலகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்க அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 87,91,000 இணைப்புதாரர்களும் ஆன்லைன் மூலமாக 74, 67,000 மின் இணைப்புதாரரும் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இதில் முதல் மாவட்டமாக அதிகபட்சமாக தமிழகத்தில் 2.66 கோடி மின் இணைப்புகள் உள்ள நிலையில், இதுவரை 1.61 கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 77. 53 விழுக்காடு மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளன.

குறைந்த அளவாக கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டத்தில் 50.93 விழுக்காடு மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த மகத்தான பணிகளுக்கு மேலும் கால அவகாசம் நீட்டிப்பு அவகாசம் வேண்டும் என்று எங்களுடைய மின்வாரியத்தின் கூட்டத்தை நடத்திய போது கோரிக்கையை முன் வைத்துள்ளார்கள். தமிழகத்தினுடைய ஒப்பற்ற முதலமைச்சர் தளபதி அவருடைய அனுமதியை பெற்று வருகின்ற 2023 ஜனவரி 31 வரை மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும் இதனை பயன்படுத்தி நிறைவு செய்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இதற்கு மேலும் ஆதாரை இணைக்க அவகாசம் தரப்படும் என இணைக்காமல் இருக்காதீர்கள். மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க கூடுதலாக 2,811 நடமாடும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என்று கூறினார். மின்வாரிய தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |