Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஜவுளிக்கான ஜிஎஸ்டி வரி உயர்வு…. தமிழகம் எதிர்ப்பு….!!!!

ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜவுளி பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதம் வரை உயர உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் தமிழக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜவுளி பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்திலிருந்து 12% ஆக உயரும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனால் பட்டு ஜரிகை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது. குறிப்பாக பட்டு சேலைகளின் விலை ரூபாய் 3000 வரை உயர வாய்ப்புள்ளது. தற்போது நெசவாளர்களுக்கு ஒரு கிராம் பட்டு ரூபாய் 4.50 முதல் ரூபாய் 7 வரை விற்கப்படுவதால், இன்னும் விலை உயரும் என்றும், பட்டுச் சேலைகளை விற்க முடியாது என்றும் பலரும் கவலை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஜவுளி பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் ஜவுளி பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்திலிருந்து 12% உயர்த்தியதற்கு தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று பழனிவேல் தியாகராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.

Categories

Tech |