ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜவுளி பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்திலிருந்து 12% ஆக உயரும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனால் பட்டு ஜரிகை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது. குறிப்பாக பட்டு சேலைகளின் விலை ரூபாய் 3000 வரை உயர வாய்ப்புள்ளது. தற்போது நெசவாளர்களுக்கு ஒரு கிராம் பட்டு ரூபாய் 4.50 முதல் ரூபாய் 7 வரை விற்கப்படுவதால், இன்னும் விலை உயரும் என்றும், பட்டுச் சேலைகளை விற்க முடியாது என்றும் பலரும் கவலை தெரிவித்திருந்தனர்.
ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று பழனிவேல் தியாகராஜன் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கோரிக்கை வைத்த நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜவுளி ரகங்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.