தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் மேலும் ஜூன் 21-ம் தேதி(நாளை) வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தோற்று குறைவாகவுள்ள 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் ஜூன் 20ஆம் தேதி இரவு முதல் மீண்டும் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, மார்க்கெட்டில் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை மொத்த வியாபாரமும், மாலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை சில்லறை வியாபாரமும் நடைபெறும் என்றும், தடுப்பூசி போட்ட வியாபாரிகளுக்கு மட்டுமே காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய அனுமதி என்றும் தெரிவித்துள்ளார்.