திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை ஜூன் 30இல் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்க்கில் , தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடந்துள்ளது, அதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அரசு சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் , ஏப்ரல் 30-ம் தேதியுடன் தயாரிப்பாளர் சங்கத்தின் பதவி காலம் முடிவதால் புதிதாக தேர்தல் நடத்தப்படும் , அதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்கப்பட்ட வேண்டுமென்று வழக்கு தொடர்ந்திருந்தார். அதே போல விஷால் தரப்பில் சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமென்ற வழக்கும் விசாரிக்கப்பட்டது.
நீதிபதிகள் செந்தில்குமார் , ராமமூர்த்தி இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கின் உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டது. அதில் ஜூன் 30ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலை நடத்தி விட்டு விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம்.
அதே போல தேர்தல் நடத்த ஓய்வுபெற்ற அதிகாரியை நியமிக்கவும் , அவர்கள் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை சரிபார்த்து தேர்தல் நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்து நடிகர் விஷால் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.