தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததை அடுத்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வருகின்றது. அதிலும் பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு பல திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் பயின்ற 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. வரும் கல்வியாண்டில் கல்லூரிகள் திறந்ததும் இந்த உதவித்தொகை வழங்கும் பணி தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வர உள்ளதாக உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 3 லட்சம் மாணவிகள் பயன் அடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.