தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு இரவு நேர ஊரடங்கை அமல்ப்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவித்து உத்தரவிட்டுள்ளது. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இன்று முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் பேருந்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் (தளர்வு) மத்திய/ மாநில அரசு தேர்வாணையங்களின் போட்டித் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகளுக்கு செல்லும் இளைஞர்கள் ஹால் டிக்கெட்/ அழைப்புக் கடிதம் காட்டி பயணம் மேற்கொள்ளலாம். இதற்கு காவல்துறை ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.