Categories
மாநில செய்திகள்

BREAKING: டாஸ்மாக் நேரம் குறைப்பு… வெளியானது திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தற்போது தன் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மேற்கு மண்டலத்தில் தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வந்த காரணத்தினால் நேற்று முன்தினம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

அதன்படி கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டும், சில பகுதிகளில் டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைக்கப்பட்டும் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்திலும் தொற்று படிப்படியாக அதிகரித்து வருவதால், சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட டாஸ்மாக் கடைகள் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. சேலத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து, டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |